NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதுளையில் ஆலங்கட்டி மழை பொழிவு!

பதுளை மாவட்டத்தில் நேற்றிரவு(06)  ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சியுடனான காலநிலை நிலவி வந்த நிலையில் நேற்றையதினம் மாலை பலாங்கொடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன் இந்த மழையுடன் ஐஸ்கட்டிகளும் தரையில் விழுந்ததாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பலாங்கொட கிரிமதித்தன்ன, யஹலவெல, பரியதன்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய, பல்லபனதென்ன, கெகில்ல, பதுகாமிமன போன்ற பிரதேசங்களில் இந்த மழை பெய்துள்ளது.

இந்த மழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மழையினால் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பின்னர் அது சீரமைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles