NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதுளையில் சட்டவிரோத முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது..!

பதுளை செல்வகந்த தியனகல பகுதியில் சட்டவிரோத முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர் 

அத்தோடு 576,500 மில்லிலிட்டர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் 

செல்வகந்த தியகல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

பதுளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அமைய பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரத்ன தலைமையில் பசறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது 

குறித்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பெர்ல் களையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர் 

இருப்பினும் குறித்த பகுதியில் மிக நீண்ட நாட்களாக சகிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது 

கைதுசெய்யப்பட் சந்தேக நபரை பதுளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Share:

Related Articles