NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல்கலை.பேராசிரியர்கள் – மாணவர்களின் தனிப்பட்ட பாலியல் தகவல்கள் இணையத்தில் – விரிவான விசாரணை ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட பாலியல் தகவல்கள் இணையத்தில் பெறப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான பல்கலைக்கழகமொன்றின் பேராசிரியர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (16) நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

பெண்களின் பாலியல் நடத்தை மற்றும் அணுகுமுறைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் போர்வையில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி மிகவும் தனிப்பட்ட பாலியல் தகவல்களைப் பெறுவதற்கு இணையத்தில் கூகுள் படிவம் (Google Form) ஒன்று பரிமாறப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், பல பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூகுள் படிவத்தின்படி தங்களின் மிகவும் தனிப்பட்ட பாலியல் தகவல்களைத் தெரிவித்துள்ளதாகவும், கூகுள் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles