NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ்ஸின் மிதி பலகையில் விழுந்து படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு!

அரச பஸ்ஸில் பயணித்த அம்பலன்முல்ல சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த பயணித்த குறித்த பஸ் நேற்று (20 ) காலை சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – சிலாபம் வீதியில் தன்டுகம விமானப்படை வீதித் தடைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பெண்ணின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த ஆண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles