(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் அதிகரிக்கப்படும் VAT வரி அதிகரிப்புக்கு அமைவாக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் பஸ் இறக்குமதியில் ஒரு பஸ்ஸுக்கு மாத்திரம் சராசரியாக ஒரு கோடியே ஐம்பத்தேழு இலட்சம் செலவாகும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இவ்வாறான விலைக்கு பஸ்களை கொள்வனவு செய்து, சாதாரண மக்களை கொண்டு செல்ல முடியாது எனவும் பஸ் உதிரிபாகங்கள், லூப்ரிகண்டுகள், எரிபொருள் விலைகள், சேவைக் கட்டணங்கள் அனைத்தும் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.