NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் பலி…!

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ நல்லதரன்கட்டுவையில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.நேற்று (23) பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொத்தனார் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் ஹலவத்தை நோக்கி பயணித்த போது தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் யாழ், கொழும்பு தனியார் பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.இதற்கமைய, மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles