ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.