NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் முன்மொழியப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபி அட்டவணைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒப்புதல் அளித்துள்ளது. 

சுற்றுப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் இறுதிப் போட்டிகள் மற்றும் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும். 

பி.சி.பி.யினால் முன்மொழியப்பட்ட அட்டவணையை எந்த மாற்றமும் செய்யாமல் ஐசிசி மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவைத் தவிர, 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன.

இதற்கிடையில், போட்டியில் இந்தியா தனது அணி பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

எவ்வாறெனினும், போட்டியில் பாதுகாப்பு காரணங்களை காட்டி இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு வர மறுத்தால், முன்னதாக 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்கு தகுதியை இழந்துள்ள இலங்கையை இணைத்து போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பெப்ரவரி 19 முதல் மார்ச் 09 வரை கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட பாகிஸ்தானின் மூன்று முக்கிய நகரங்களில் நடைபெறும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles