(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இதையடுத்து, அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
தேவாலயங்களை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இந்நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாகாண உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செய்தி தொடர்பாளர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.