பாகிஸ்தானில் எதிர்வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை பாகிஸ்தானில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்ததியுள்ளதாகவும் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு தீவிரமடைந்துள்ளதால் கடுமையான உணவு பாதுகாப்பின்மை அடுத்த மாதங்களில் உயரக் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் பிற முக்கிய பொருட்களை குடும்பங்கள் வாங்கும் திறன் நலிவடைந்துள்ளதாகவம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என ஐ.நா. சபை தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதே போல் ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், ஏமன், ஹைட்டி, சூடான் புர்கினா பாசோ, மாலி உள்பட 22 நாடுகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.