NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாபிரிக்கா திக் திக் வெற்றி…!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின.

நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, சவுத் ஷகீல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணியின் தப்ரைஸ் ஷம்சி 60 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 271 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக எய்டன் மார்க்ரம் 91 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்ரிடி 45 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles