NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் வெடிச் சம்பவம் – 12 பேர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலுவலகத்தில் பழைய வெடி மருந்து இருப்பு இருந்ததாகவும், அது வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமா அல்லது பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் துணை அதிகாரிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles