NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி உத்தரவு…!

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடைகிறது.

இருப்பினும், பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இதற்கமைய, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவுடன் கலைத்து ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles