NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க இரண்டாவது போட்டி இன்று!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் (24) நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியானது, ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நண்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.

நேற்றைய போட்டியில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் மிகவுமே சிறப்பான ஆட்டத்தை பாகிஸ்தான் அணி வெளிப்படுத்தியது.

அதற்கு எதிர்மாறாக ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இன்றைய தினம் நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 2-0 என தொடரை கைப்பற்றும்.

இதில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 1-1 என போட்டியானது சமநிலையில் தொடரும்.

Share:

Related Articles