பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற நபரொருவர் மாயமாகியுள்ள நிலையில் அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு , கல்குடா அருகே – பாசிக்குடா கடலில் நேற்று (28.04.2024) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த குழுவொன்று பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே அவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவரைத் தேடும் பணிகளை பிரதேசவாசிகள் உள்ளிட்டோர் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.