NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலையின் சூரிய தகடுகளில் பொருத்தப்பட்டிருந்த ரூ.18 பெறுமதியான மின்கலங்கள் திருட்டு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தம்புள்ளையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் சூரிய தகடுகளில் பொருத்தப்பட்டிருந்த 12 மின்கலங்கள் தம்புள்ளை மற்றும் சீகிரிய பிரதேசங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளை கும்பல்களால் திருடப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட 12 மின்கலங்களின் பெறுமதி சுமார் 18 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீனா மற்றும் கல்வி அமைச்சால் குறித்த பாடசாலைக்கு சூரிய தகடுகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இப்பாடசாலையின் பிரதான வாயிலை உடைத்துள்ள திருடர்கள் அலுவலகத்தின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்து 12 மின்கலங்களை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்று (18) காலை தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில்,சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles