NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலையில் ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு அகற்றம்…!

கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி வளாகத்தில் ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அகற்றப்பட்டுள்ளது.

அந்த குளவிக்கூடு நேற்றைய தினம்(13) அகற்றபட்டுள்ளது.

குறித்த அந்த குளவிக்கூடு கலைந்ததில் 35 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்.

அதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், கற்றல் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டு பாதுகாப்புக்காக வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அகற்றப்பட்டது.

அதனை அடுத்து தருமபுரம் மத்திய கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles