NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை உபகரணங்களின் விலை இரட்டிப்பாக அதிகரிக்கக்கூடும் அபாயம்!

VAT வரி 18%ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி மாதம் முதல் பாடசாலை உபகரணங்களின் விலையானது தற்போதைய விலையிலிருந்து இரட்டிப்பாக அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வருட இறுதிக்குள் தேவையான பாடசாலை உபகரணங்களை தற்போதைய விலையிலேயே கொள்வனவு செய்வது சிறந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தற்போதைய விலையே தங்களின் கொள்முதல் செய்யும் இயலுமையை விட அதிகமாக உள்ளது என கவலை வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த மாதத்தை விட பாடசாலை உபகரணங்களின் விலையானது இந்த மாதம் 05 – 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினாலும் போதிய வருமானம் இன்மையாலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த VAT வரி அதிகரிப்பானது மக்களின் சுமையை வெகுவாக அதிகரிப்பதோடு குறிப்பாக பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பினால் பெற்றோர்கள் துயர நிலைக்கு தள்ளப்படுவார்கள்.  

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles