(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பாணந்துறை – நல்லுருவ கடலில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர் நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவர் பாணந்துறை மலமுல்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையை பிரதேசவாசிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.