NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஷிரானின் சொத்துக்கள் முடக்கம்..!

இந்தியாவில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான பழனி ஷிரான் க்லோரியன் என்பவருக்குச் சொந்தமான 8 கோடி ரூபா பெறுமதியுடைய சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

பழனி ஷிரான் க்லோரியன் என்பவருக்குச் சொந்தமாக வத்தளை பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடு மற்றும் கார் என்பன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, பழனி ஷிரான் க்லோரியன் என்பவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் இந்த சொத்துக்களைச் சம்பாதித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பழனி ஷிரான் க்லோரியன் என்பவருக்குச் சொந்தமான சொத்துக்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles