NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனுக்கு அபராதம்!

போக்குவரத்து விதியை மீறியதற்காக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அமைச்சரின் மகன் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கலகெதர பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றை கடக்க முற்பட்டபோது வெள்ளைக் கோட்டைக் கடந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் மகன் தவறை ஒப்புக்கொண்டதால், அவருக்கு போக்குவரத்து பொலிஸ்அதிகாரிகள் அபராதச் சீட்டு வழங்கியுள்ளனர்.

அபராதம் செலுத்த அருகில் உள்ள தபால் நிலையம் எது என்று அமைச்சரின் மகன் கேட்டுள்ளார். அப்போது பொலிஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தான் பொத மக்கள் பாதகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகன் என அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் பொலீஸ் அதிகாரிகள், அவர் யார் என்று ஏன் கூறவில்லை எனக் கேட்டடதுடன், அபராதப் பணமான ஆயிரத்த 100 ரூபாவை தபால் நிலையத்திற்கு எடுத்துச் சென்று செலுத்தி, அதற்கான பற்றுச்சீட்டு மற்றும் ஓட்டுனர் உரிமத்தை அமைச்சரின் மகனிடம் கொடுத்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles