ராஜபக்ஷக்களுக்கு எதிராக நீதிமன்றம் முன்வைத்த தீர்ப்பினால் பாராளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டதையடுத்து சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியுடன் நாடு வங்குரோத்தடைவதற்கு ராஜபக்ஷக்களே காரணம் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து, அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கருத்துக்களால் சபையில் கடும் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமசாதவை தாக்கும் வகையில் நடந்துக் கொண்டதால் சபாநாயகர் சபையை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.