வங்கிகள் வழங்கும் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை ஏலத்தில் விற்பதை நிறுத்தி வைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வங்கிகள் வழங்கிய கடனை வசூலிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு மசோதா (பராத்தா சட்டம்) வரும் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பெற்ற கடன் பணத்திற்காக வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்துகளை ஏலத்தில் விற்பனை செய்வதை டிசம்பர் 15ம் திகதி வரை நிறுத்தி வைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.