NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றத்தில் 22வயது இளைஞன்..!

பிரிட்டனில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் ஒருவர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொழில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷயர் தொகுதியில் 39 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற சாம் கார்லின் என்ற இளைஞன் “பாராளுமன்றத்தின் குழந்தை” என்று அழைக்கப்படுவார் என விமரசித்துள்ளனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான சாம், சுமார் 22 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றிய ஷைலேஷ் வராவை தோல்வியடைய செய்துள்ளார்.

மேலும், தான் பெற்ற வெற்றியை “அரசியல் பூகம்பம்” என்று வர்ணித்து இன்னும் அதிகமான இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள் எனவும் சாம் கார்லின் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles