எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 662 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 642 முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 5 முறைப்பாடுகளும், ஏனைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 15 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசியத் தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 215 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 447 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்தநிலையில், 522 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், 140 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.