NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றில் பாரதியார் கவிதையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி !

நாட்டில் பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்,பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் ஒருமித்த எண்ணத்துடன் ஒன்றுபட முடியாமல் இருப்பது ஏன்? என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(07)  வைபவரீதியாக ஆரம்பமானது.

இதன் போது, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து  ஜனாதிபதி ஆற்றிய உரையின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

19 ஆம் நூற்றாண்டில் மகாகவி பாரதியார் தனது நாடு பற்றி எழுதிய கவிதையொன்று நினைவிற்கு வருகிறது. அதனை சிங்களத்தில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன

”முப்பது கோடி முகமுடையாள்

உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்

இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்

எனில் சிந்தனை ஒன்றுடையாள்”

அவ்வாறான எண்ணம் எமக்கு ஏன் வரவில்லை? பல்வேறு எண்ணங்கள் இருந்தாலும் பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும், பல்வேறு பிரச்சினைகள், நம்பிக்கைகள் இருந்தாலும், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், எமது நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் ஒருமித்த எண்ணத்துடன் ஒன்றுபட முடியாமல் இருப்பது ஏன்? எமது நாட்டு இளைய சமூகத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட முடியாதிருப்பது ஏன்?

மீண்டும் – மீண்டும் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பொது நோக்கத்துடன் ஒன்றுபடுங்கள். மாற்றத்தை நம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமக்கு நாமே ஔியாவோம்  எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

Share:

Related Articles