உள்ளூர் பால்மா, நெத்தலி உள்ளிட்ட 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் நேற்று அறிவித்தது.
மேலும், இந்த விலை குறைப்புகள் இன்று முதல் அமுலாகும் என நிறுவனம் அறிவித்தது
அதன்படி, உள்ளூர் பால்மா 29 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 970 ரூபாவுக்கும் ஒரு கிலோ கிராம் சோயா மீட் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு 625 ரூபாவுக்கும் ஒரு கிலோ நெத்திலி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு ஆயிரத்து 160 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேபோன்று, ஒரு கிலோகிராம் பாஸ்மதி அரிசி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 675 ரூபாவுக்கும் சிவப்பு சீனி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 350 ரூபாவுக்கும், கிழங்கு 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 325 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.
மேலும், ஒரு கிலோகிராம் கடலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 555 ரூபாவுக்கும், வெங்காயம் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 630 ரூபாவுக்கும், சிவப்பரிசி 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 147 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.