NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சீன பிரஜை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்..!

சர்வதேச பொலிஸாரினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சீனாவில் பாரியளவில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் 28 வயதுடைய சீன பிரஜையே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மாலைத்தீவில் இருந்து நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles