NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல பூங்காக்களை மூட நடவடிக்கை – காரணம் வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மூன்று மாதங்களுக்கும் மேலாக போதிய மழையில்லாத காரணத்தினால் விலங்குகளுக்கு கடுமையான உணவு மற்றும் நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக யால, உடவலவ மற்றும் வில்பத்துவ தேசிய பூங்காக்களை மூடுமாறு வனவிலங்கு அதிகாரிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.

தேசிய பூங்காக்களை மூடுவது தொடர்பாக இறுதி முடிவை எடுப்பதற்கு வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசிக்க வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் உத்தேசித்துள்ளது.

எதிர்வரும் மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு கிடைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வறண்ட காலநிலை காரணமாக உலர் வலயத்திற்குட்பட்ட தேசிய பூங்காக்கள் மட்டுமன்றி வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களிலும் விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரின்றி தவித்து வருவதாக தெரியவந்துள்ளது.

நாட்டில் வனவிலங்கு மண்டலங்கள் 11 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளன, அதில் சுமார் 10 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு உலர் வலயத்தைச் சுற்றி பரவியுள்ளது.

வில்பத்து, யால மற்றும் உடவலவ தேசிய பூங்காக்களில் உள்ள பல சிறிய ஏரிகள், குளங்கள் மற்றும் பெரிய ஏரிகளின் நீர் மட்டம் கீழ்மட்டத்திற்கு இறங்கியுள்ள நிலையில், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம்; மூலம் விலங்குகளுக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக யால தேசிய பூங்காவில் உள்ள 20 பெரிய குளங்களின் நீர் கொள்ளளவு 30 சதவீதமாகவும், சிறிய குளங்களின் நீர் கொள்ளளவு 10 சதவீதமாகவும் குறைந்துள்ளது. பூங்காவின் வனவிலங்கு அலுவலர்கள் பூங்காவின் கான்கிரீட் குளங்கள் மற்றும் சிறிய தொட்டிகளுக்கு நாள் ஒன்றுக்கு 100,000 லீற்றர் தண்ணீரை வழங்கி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுளு;ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles