(அமிர்தப்பிரியா சிலவிங்கம்)
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று (13) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, தொடர்ந்து ஈபிள் டவர் மூடப்பட்டது.
வெடிகுண்டு சோதனை தீவிரமாக நடத்தப்பட்ட பிறகு, அந்த மிரட்டல் போலியானது என தெரிய வந்த நிலையில், 2 மணி நேரம் கழித்து எச்சரிக்கை நீக்கப்பட்டு மீண்டும் ஈபிள் டவர் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக இதேபோன்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.