மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனும், இரண்டு முறை ஒலிம்பிக் சம்பியனுமான ஆண்டி முர்ரே (37), பாரிஸ் ஒலிம்பிக் போட்டியே தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று நேற்று (23) உறுதிப்படுத்தியுள்ளார்.
“எனது கடைசி டென்னிஸ் போட்டிக்காக பாரிஸுக்கு வந்தேன்” “பிரிட்டிஷ் அணிக்காகப் போட்டியிடுவது எனது தொழில் வாழ்க்கையின் மறக்கமுடியாத வாரங்களாகும், கடைசியாக அதைச் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!” என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முர்ரே தனது ஐந்தாவது ஒலிம்பிக் போட்டியில் பாரிஸில் பங்கேற்கிறார். அவர் 2012 லண்டன் விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் தங்கம் வென்றார் மற்றும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரியோவில் தனது பட்டத்தை தக்கவைத்தார்.
விம்பிள்டன் சம்பியன்ஷிப் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு முர்ரே முதுகில் ஏற்பட்ட காயத்தை சமாளிக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார், ஆனால் அந்த நேரத்தில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஓய்வு பெற முடிவு செய்திருந்ததால், தனது கடைசி புல்-கோர்ட் கிராண்ட்ஸ்லாம் விளையாடுவார் என்று நம்பினார்.
அவர் தனது முதல் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஒற்றையர் போட்டியில் இருந்து விலகினார், ஆனால் விம்பிள்டனில் அவரது சகோதரர் ஜேமி முர்ரேவுடன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடினார்.