NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரித்தானிய இளவரசர் ஹெரி – மேகன் விவாகரத்து?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பிரித்தானிய இளவரசர் ஹெரியும், அவர் மனைவி மேகன் மேர்க்கலும் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவும் நிலையில் அது தொடர்பில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் வதந்தி எனவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.

அண்மையில் இளவரசர் ஹெரி தனது நண்பர் நாச்சோ ஃபிகியூரஸுடன் ஜப்பான் பயணம் மேற்கொண்டார், அந்த சமயத்தில் மேகன் வீட்டில் இருந்தார். இந்த நிகழ்வும் விவாகரத்து ஊகங்களுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தன்னை விவாகரத்து செய்ய, முக்கிய நிபந்தனைகளை மேகன் விதித்துள்ளதாக, சில அரச குடும்ப நிபுணர்களை மேற்கோள் காட்டி ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, குறைந்தபட்சம் 80 மில்லியன் டொலர்களை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்றும், தங்கள் பிள்ளைகள் ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை வளர்க்கும் உரிமை தனக்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்றும் மேகன் நிபந்தனை விதித்துள்ளாராம்.

மேலும், விவாகரத்துக்கான ஹெரியின் கோரிக்கைக்கு சம்மதிக்க Duchess of Sussex என்ற தனது பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளாராம்.

இதனிடையில் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஹெரி ஆகியோர் தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை பேசி சமரசம் செய்து கொண்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

இதையடுத்து மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியமுடன் சேர்ந்து இளவரசர் ஹெரிக்கு தனது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share:

Related Articles