NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிறந்து 15 நாட்களே ஆன சிசுவை உயிருடன் புதைத்த தந்தை!

மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால் பிறந்து 15 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தந்தை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவுசாகர் பெரோஸ் நகரத்தில் வாழ்ந்து வந்த நபர் ஒருவரின் மனைவி கடந்த 15 நாட்கள் முன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில், குழந்தையின் ஆரோக்கியம் குன்றியதால் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த தாயாபிடம் மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர். மருத்துவ செலவுக்கு பணம் இல்லத்ததால் குழந்தையை புதைத்தாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

Share:

Related Articles