NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிள்ளைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு எச்சரிக்கை!

பிள்ளைகள் பட்டாசு கொளுத்தும் போது விசேட அவதானம் செலுத்துமாறு பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். 

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பட்டாசு தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தும் பெற்றோரினால் விபத்துக்கள் ஏற்படக் கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக மது போதையுடன் வாகனம் செலுத்துவதனாலும், வீட்டு வன்முறைகளினாலும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டியது அவசியமானது.

மேலும் ஆபத்தான இடங்களில், குறிப்பாக நீர் நிலைகளில் பிள்ளைகள் நீந்துவது, நீராடுவதை தவிர்க்கப்பட வேண்டும் என வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles