பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அஞ்சல் தொடருந்திலும், பண்டாரவளை தொடருந்து நிலையத்திலும் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் 8 இராணுவ சிப்பாய்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, தியத்தலாவ இராணுவக் கல்லூரியில் கடமையாற்றிவரும் குறித்த இராணுவ சிப்பாய்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணப்பையொன்று தொடர்பில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அவர்கள் குழப்பம் விளைவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.