கரையோர புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்திற்கும் கட்டுகருந்த புகையிரத நிலையத்திற்கும் இடையிலான சகாரிகா விரைவு புகையிரத சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக, கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால், பயணிகள் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.