கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடகொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு புடினை வடகொரிய அதிபர் கிம் ஜொங்-உன் அழைத்திருந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்றையதினம் வடகொரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இறுதியாக கடந்த 2000 ஆண்டு புடின் வடகொரியாவுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அதிபரும் வட கொரிய அதிபரும் சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில், வடகொரியாவுக்கு விஜயம் செய்துள்ள புடினுக்கு அதிபர் கிம், விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுவடைவது மற்றும் பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.