இராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாம்பன் பாலம் சேதமடைந்த நிலையில் அதன் அருகிலேயே புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்திய பெறுமதிப்படி 545 கோடி ரூபாய் செலவில் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய அமைப்புடன், இப்புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் கடற்படையினரின் கப்பல் ஒன்றை பாம்பன் பாலத்தின் குறுக்கே பயணிக்க செய்து அதன் திறந்து மூடும் அமைப்பை சோதனை செய்யவுள்ளனர்.
அதனை தொடர்ந்து, எதிர்வரும் மார்ச் மாதம் பாலம் திறக்கப்படலாம் என்றும், அதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து புதிய பாலத்தை திறந்து வைக்கவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.