NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்..!

புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன்படி, பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், நாமல் கருணாரத்ன – விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சராகவும், வசந்த பியதிஸ்ஸ – கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சராகவும், நலின் ஹேவகே – தொழிற்கல்வி பிரதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அத்தோடு, ஆர்.எம். ஜயவர்தன – வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், கமகெதர திஸாநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும், வழக்கறிஞர் டி.பி. சரத் – வீட்டுவசதி பிரதி அமைச்சராகவும், ரத்ன கமகே – மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

மேலும், மஹிந்த ஜயசிங்க – தொழிலாளர் பிரதி அமைச்சராகவும், அருண ஜயசேகர – பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும், அருண் ஹேமச்சந்திர – வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராகவும், அன்டன் ஜெயக்கொடி – சுற்றாடல் பிரதி அமைச்சராகவும், எம்.முனீர் – தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சராகவும், பொறியியலாளர் எரங்க வீரரத்ன – டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, எரங்க குணசேகர – இளைஞர் விவகார பிரதி அமைச்சராகவும், சதுரங்க அபேசிங்க – கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், பொறியியலாளர் ஜனித் ருவான் கொடித்துவக்கு – துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சராகவும், கலாநிதி நாமல் சுதர்ஷன – மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ருவன் செனரத் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சராகவும், கலாநிதி பிரசன்ன குமார குணசேன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சராகவும்,
டாக்டர் ஹன்சக விஜேமுனி – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சராகவும், உபாலி சமரசிங்க – கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராகவும், ருவன் சமிந்த ரணசிங்க – சுற்றுலாத்துறை பிரதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

சுகத் திலகரத்ன – விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராகவும்,
சுந்தரலிங்கம் பிரதீப் – பெருந்தோட்ட மற்றும் கிராம அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், சட்டத்தரணி சுனில் வட்டகல – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சராகவும்,
கலாநிதி மதுர செனவிரத்ன – கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சராகவும், கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும – நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகவும் கலாநிதி சுசில் ரணசிங்க – காணி மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles