NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புனித மரியாள் திருச்சொரூபத்தில் வடியும் சிகப்பு நிற கண்ணீர்!

ஹட்டன் ஸ்ரீ சிலுவை தேவாயலத்தில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட புனித மரியாள் திருச்சொரூபத்தின் வலது கண்ணில் சிகப்பு நிறத்தில் கண்ணீர் வடிந்து வருவதாக அந்த தேவாலயத்தின் அருட்தந்தை வர்ணகுலசூரிய அந்தனி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஹட்டன் குடாகம பிரதேசத்தில் கத்தோலிக்கர் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த புனித மரியாள் திருச்சொரூபத்தில் வலது கண்ணில் சிகப்பு நிறத்தில் கண்ணீர் வடிவதை கண்ட அவர், நேற்று மாலை அதனை தேவாலயத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து புனித மரியாளின் திருச்சொரூபத்தை தேவலாயத்தில் பிரதிஷ்டை செய்ததாக அருட்தந்தை கூறியுள்ளார்.

திருச்சொரூபத்தில் வடிந்துள்ள கண்ணீரில் ஈரப்பதன் காணப்பட்டதாகவும் இன்று காலையில் கண்ணீர் காய்ந்து போய் காணப்பட்டது எனவும் அருட்தந்தை கூறியுள்ளார்.

புனித மரியாளின் திருச்சொரூபத்தில் சிகப்பு நிறத்தில் கண்ணீர் வடிவதை பார்க்கவும் ஜெபம் செய்வதற்காகவும் நேற்றிரவு இரவு முதல் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் உட்பட பிரதேசவாசிகள் ஸ்ரீ சிலுவை தேவாலயத்திற்கு வந்த வண்ணம் இருப்பதாகவும் தேவலாயத்தில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அருட்தந்தை வர்ணகுலசூரிய அந்தனி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேவாலயத்திற்கு அதிகளவான மக்கள் வருவதை முன்னிட்டு அங்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Share:

Related Articles