NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புற்றுநோயாளர்களின் தொகை அதிகரிப்பு – நாளொன்றுக்கு 100 பேர் பாதிப்பு!

நாளொன்றுக்கு புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 100 பேர் புதிதாக கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

துரித உணவு மற்றும் பல்வேறு பானங்கள் போன்றவை புற்றுநோய் ஏற்படுவதற்கு மறைமுக காரணமாகிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வருடாந்தம் 35,000 முதல் 40,000 வாரியான புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வருடாந்தம் 750 முதல் 800 வரையான சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

வாய்புற்றுநோய், மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் ஆகியவை ஆண்களிடையே மிகவும் பொதுவாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மார்பக புற்றுநோய் பெண்களிடையே பொதுவாக பரவுவதுடன், தைரோய்ட் புற்றுநோய், குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகியவையும் பெண்களிடையே பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களை விட பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் காரணமாக ஏற்படும் தோல் நோய்கள் பெண்களிடையே புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Share:

Related Articles