NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெங்களுரு அணித்தலைவர் Faf Du Plessis’க்கு அபராதம்!

16ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பெங்களுரு அணித்தலைவர் பாப் டு பிளெஸூக்கு (Faf Du Plessis) 12 இலட்சம் ரூபாய் (இந்திய பெறுமதி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில், துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. இதையடுத்து 213 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

லக்னோ அணியின் அதிகபட்ச சேசிங் இது என்பதுடன், 4ஆவது லீக்கில் ஆடிய லக்னோவுக்கு இது 3ஆவது வெற்றியாகும். பெங்களுருவுக்கு இது 2ஆவது தோல்வியாகும்.

இந்நிலையில், பெங்களுரு அணித்தலைவர் பாப் டு பிளெஸ் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் 12 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Share:

Related Articles