NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த பெண் கைது!

9 பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணை கல்கிசை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் சில காலமாக இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அங்கு விற்பனை செய்யப்படவிருந்த 9 பெண்கள் உட்பட சந்தேகநபரையும் கைது செய்த பொலிஸார், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 43 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், மித்தெனிய கஹட்டகஸ் சமவெளி, கங்கந்த, மெதவச்சிய, புத்தள, மொரட்டுவ, பொத்துவில், ரக்வான, இரத்மலானை மற்றும் வாதுவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேகநபரை கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles