NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரல்!

பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பல்வேறு துறைகளில் நிரூபிக்கப்பட்ட அறிவு, அனுபவம் மற்றும் கீர்த்தியுடன் பொதுவாழ்வில் மேன்மைமிக்கவர்களாக இருக்கும் நபர்களிடமிருந்து பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காகப் பரிந்துரைக்கப்படுவதற்கு அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களை கோருகின்றது.

பாராளுமன்ற இணையத்தளத்தில் http://www.parliament.lk ‘பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனும் துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ளதற்கமைய தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் தகவல் படிவம் ‘அ’ இற்கு அமைவாகவும், பெயர்குறித்த நியமனங்கள் தகவல் படிவம் ‘ஆ’ இற்கு அமைவாகவும் தயாரிக்கப்பட வேண்டும்.

உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்/ பெயர் நியமனங்கள் 2025 ஜனவரி 20 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, எனும் முகவரிக்கோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பப்படல் வேண்டும். 

பெயர் குறித்த நியமனங்களின் விண்ணப்பப் படிவங்கள், பெயர் குறித்து நியமித்தவரால் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதோடு, பெயர் குறித்து நியமிக்கும் தரப்பினரால் அரசியலமைப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

மேலதிக தகவல்களை கீழே பின்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ள முடியும்.

https://www.parliament.lk/ta/secretariat/advertisements/view/320

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles