NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெண் ஒருவரை மர்மான முறையில் கடத்திய இரு பெண்கள்- விசாரணையில் தெரியவந்தது உண்மை..!

மாரவில கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த 2 பெண்களால் நேற்று இரவு கடத்தப்பட்டுள்ளார். 

 கடத்தப்பட்ட பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னிடம் பணம் பெற்ற இரண்டு பெண்கள் தன்னை கடத்திச் சென்றதாக கூறியுள்ளார். மேலும் , கடத்தப்பட்டவர்கள் தன்னிடம் பணத்தைக் கோருவதால், கடத்தப்பட்ட பெண், பணத்தை எடுத்துக்கொண்டு தன்னை மீட்க வருமாறும் கணவரிடம் கூறியுள்ளார். 

 கணவர் மாரவில பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த பெண்ணை கண்டுபிடிக்க மாரவில பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

கொச்சிக்கடை, தளுவகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், பெண்ணைக் கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர். 

 கொச்சிக்கடை தலுவகொடுவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயது மற்றும் 42 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

Share:

Related Articles