NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெரிய வெங்காய செய்கை – அறுவடைக்கு உரிய விலை இல்லை!

அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவௌ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருடத்துக்கான பெரிய வெங்காய செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின் அறுவடைக்கு உரிய விலை கிடைக்காதமையால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த சந்தை விலை சுமார் 156,
160 மற்றும் 170 ரூபாவாக உள்ளமை வருத்தமளிப்பதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விவசாயிகள் விளைவித்த பெரிய வெங்காயங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் தமக்கு ,லாபம் ,ல்லை எனவும் ,தனால் பயிர்ச்செய்கைக்காக பெற்ற கடனைக் கூட செலுத்த முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கித்துள்ளனர்.

Share:

Related Articles