NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெருவில் 2 மாத காலத்திற்கு அவசரகால நிலை பிரகடனம் !

பெருவில் 2 மாத காலத்திற்கு 544 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எல் நினோ (El Nino) நிகழ்வினால் அங்கு பெரும் வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படவிருப்பதாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் கிழக்கு பசுபிக் கடலின் மேற்புரத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பமயமாதலால் உலகின் பல நாடுகளில் பருவகால மாற்றங்களில் – சில வருட கால இடைவெளிகளில் – ஒரு சமச்சீரற்ற நிலை உருவாகிறது.

இதன் காரணமாக அதிக வறட்சி, அதிக மழைப்பொழிவு என வானியல் சூழ்நிலை மாறி மாறி நிகழ்கிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களும் அதிகம் உருவாகின்றன. இந்நிகழ்வை “எல் நினோ” (El Nino) என சுற்றுச்சூழலியலாளர்கள் அழைக்கின்றனர்.

Share:

Related Articles