பெருவில் பரவிவரும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரு நாட்டில் உள்ள அமேசன் வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காட்டுத்தீ அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் பரவிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும், இந்த காட்டுத்தீயில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகப் பெரு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், காட்டுத்தீயில் சிக்கிப் படுகாயமடைந்த 128 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை, காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.