NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்தார் வோக்னர் குழுவின் தலைவர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)


யுக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய இராணுவத்துக்கு ஆதரவாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வோக்னர் குழு போரிட்டது.

இதற்கிடையே தங்களது குழு மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்தியதாக வோக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் குற்றசாட்டி ரஷ்யாவில் கிளர்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தார்.

இதையடுத்து அக்குழுவின் 25,000 வீரர்கள் தலைநகர் மொஸ்கோவை நோக்கி படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரிகோஷின் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதன்பின் பெலாரஸ் நாட்டு அதிபர் லுகா ஷென்கோவின் சமரசத்தை ஏற்று கிளர்ச்சியை கைவிடுவதாக எவ்ஜெனி ரிகோஷின் அறிவித்தார். ரஷ்யா – வோக்னர் குழு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் பதற்ற நிலை முடிவுக்கு வந்தது.

இதற்கிடையே வோக்னர் குழு வீரர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம் அல்லது தங்களது குடும்பங்களுடன் செல்லலாம் என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்தார்.

வோக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின், ரஷ்யாவில் இருந்து வெளியேறினார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. அவர் சென்ற ஜெட் விமானம் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் அருகே நேற்று காலை தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்திலையில் எவ்ஜெனி பிரிகோஷின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது. இது தொடர்பாக பெலாரஸ் ஜனாதிபதி லுகா ஷென்கோ கருத்து தெரிவித்த போது, வோக்னர் குழு தலைவர் பெலாரஸ் நாட்டுக்கு வந்துள்ளார்.

சமரச பேச்சின் போது பிரிகோஷினிடம், வோக்னர் படை ரஷ்ய தலைநகருக்குள் நுழைந்ததால் அவரது வீரர்கள் அழிக்கப்படுவார்கள். பாதி வழியிலேயே நசுக்கப்பட்டு விடுவீர்கள் என்று தெரிவித்தேன். வோக்னர் வீரர்களுக்கான முகாம்கள் பெலாரசில் அமைக்கவில்லை. தேவைப்பட்டால் சில வளர்ச்சியடையாத பகுதிகள் வழங்கப்படும் என்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles