NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெலாரஸ் நாட்டு எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் – இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது!

பெலாரஸ் நாட்டு எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்த நபர் சட்டவிரோத முகவர் மூலமாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்காக ரஷ்யா சென்றுள்ளார்.

அங்கிருந்து பெலராஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக திட்டமிட்டிருந்த வேளையில், பெலராஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோமீற்றர் தூரத்தை நடந்தே கடப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவுடன் சென்றுள்ளார்.

இதன்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெலராஸ் எல்லையில் இருந்து கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதியன்று அந்நாட்டு இராணுவத்தினரால் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமையன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்து இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Share:

Related Articles